/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் ஆபீசுக்கு காதில் பூ சுத்தி வந்த நபர்
/
கலெக்டர் ஆபீசுக்கு காதில் பூ சுத்தி வந்த நபர்
ADDED : ஜூன் 21, 2025 12:36 AM

தேனி: தேவதானப்பட்டி வடக்குத்தெரு கண்ணன் நுகர்வோர் சங்க நிர்வாகி. இவர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மஞ்சளாறு அணையின் உண்மையான வரைபடம் வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை அறிந்து கொள்வதற்காக மனுக்களை வழங்கினார்.
கடந்த முறை கூட்டத்தில் கலெக்டர் ஆன்லைன் உள்ளதை வழங்க கூறினார். ஆனால் மஞ்சளாறு வடிநில கோட்ட பொறியாளர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை. நேற்று வரைபடம் கிடைக்காததால் கழுத்தில் பேனருடன், கண்களில் கருப்புத்துணி, காதில் பூ வைத்து விவசாயிகள் குறைதீர் கூட்ட அரங்கில் கண்ணன் நுழைந்தார். போலீசார் அவரை வெளியேற்றினர். வேஷம் கலைத்தபின் கலெக்டரிடம் மனு அளித்தார். அப்போது மஞ்சளாறு வடிநில கோட்ட அதிகாரிகளை கடுமையாக கலெக்டர் கண்டித்தார். பின் உடனடியாக வரைபடம் வழங்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.