ADDED : செப் 20, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: - அல்லிநகரம் ஒண்டிவீரன் நகர் லட்சுமி 42. இவர் ஆறு ஆண்டுகளாக அப்பகுதியில் இயங்கிவரும் ஆதித்யா மகளிர் சுய உதவிக்குழு சங்க தலைவியாக உள்ளார்.
2021 முதல் அதேப்பகுதி சுரேஷின் மனைவி திலகம் சங்க உறுப்பினராக சேர்ந்து ரூ.75 ஆயிரம் கடன் பெற்றார்.
மாதத் தவணையாக ரூ.3ஆயிரம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 25 மாதங்களாக தவணை ரூபாய் செலுத்தவில்லை. இதனால் பணம் கேட்ட லட்சுமியிடம், பணம் கட்ட முடியாது என்றார்.
பணம் தர வலியுறுத்த திலகம் வீட்டிற்கு சென்றார் லட்சுமி. திலகம் கணவர் சுரேஷன் ஆத்திரம் அடைந்து லட்சுமியை தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார். லட்சுமி புகாரில் சுரேஷை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.