/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : பிப் 22, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அரண்மனைப்புதுார் கிழக்குத்தெரு ரவிச்சந்திரன் 50.
அரண்மனைப்புதுார் ஊராட்சியின் தற்காலிக உதவியாளராக பணியில் உள்ளார். கொடுவிலார்பட்டி செயலர் உத்தரவுப்படி புன்செய், நன்செய் புறம்போக்கு நிலங்களின் விபரங்களை கேட்க, கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விபரங்கள் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அல்லிநகரம் ராஜேஷ், வி.ஏ.ஓ., அலுவலக வாசலில் நின்று கொண்டு, ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி தகராறில் ஈடுபட்டார். பின் கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் புகாரில், ராஜேஷை பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., பாக்கியம் கைது செய்தார்.