/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெரு நாய்களுக்கு கருத்தடை நிதியின்றி தொடராத அவலம்
/
தெரு நாய்களுக்கு கருத்தடை நிதியின்றி தொடராத அவலம்
ADDED : ஜூன் 21, 2025 12:42 AM
கம்பம்: கம்பம், சின்னமனுாரில் நகராட்சிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் பணி நிதி ஒதுக்கீடு இல்லாததால் தொடர முடியாமல் உள்ளது.
தேனி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. ஊர் ஊருக்கு கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களால் கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்கிறது.
இதில் வெறிநோய் பாதித்த நாய்களும் உலா வருகிறது.
இவற்றை கட்டுப்படுத்த பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் பயனில்லாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் கலெக்டர் நகராட்சிகளில் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி சமீபத்தில் கம்பம், சின்னமனுார் நகராட்சிகளில் ஒரு சில தெரு நாய்களை பிடித்து ஆப்பரேஷன் செய்தனர். பெயரளவிற்கு ஒரு சில நாய்களை பிடித்து ஆப்பரேஷன் செய்து விட்டு முடித்து கொண்டனர். காரணம் அதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால், ஆப்பரேஷனை தொடர முடியவில்லை என்கின்றனர்.
இதனால் தெருநாய்களின் கூட்டம் மீண்டும் சுற்றி வருகிறது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உத்தமபாளையத்தில் தெருவிற்கு 10 நாய்கள் வீதம் சுற்றி இரவில் அதிக சத்தத்துடன் குரைப்பதால், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் அவதிப்படுகின்றனர்.