/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் ஸ்டேஷன் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்
/
போலீஸ் ஸ்டேஷன் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்
போலீஸ் ஸ்டேஷன் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்
போலீஸ் ஸ்டேஷன் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்
ADDED : மார் 06, 2024 05:06 AM

போடி : போடி அருகே சிலமலையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி மேற்கொண்டதை போலீசார் தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
போடியில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்டேஷன் இல்லை. இதனால் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாக்கவும் இட வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர்.
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க சிலமலை மெயின் ரோட்டில் இருந்து ராணி மங்கம்மாள் ரோட்டில் உள்ள வண்டி பாதையில் 34 சென்ட் இடத்தை சிலமலை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டுக்கு முன்பு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அரசு நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஸ்டேஷன் கட்டுமான பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில் இந்த இடத்தை சிலமலையை சேர்ந்த கனகராஜ் 55, தனக்கு சொந்தமான இடம் என கூறி ஆக்கிரமித்து வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார்.
போலீசார் பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் கட்டடம் கட்டினார்.
நேற்று போடி டி.எஸ்.பி., பெரியசாமி தலைமையில், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்.ஐ., இதிரிஸ்கான், வி.ஏ.ஓ., ஆனந்தகுமார், சர்வேயர் ஜெகநாதன் சம்பவ இடத்துக்கு சென்று அந்த இடத்தில் கட்டடம் கட்டக் கூடாது என ஆக்கிரமிப்பாளரிடம் எச்சரித்து மண் அள்ளும் இயந்திரம் மூலம் கட்டடத்தை இடிக்க முயன்றனர்.
அதன் பின் அகற்றி கொள்வதாக கனகராஜ் கூறி தானாக அகற்றி கொண்டார்.

