நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் நூற்றாண்டு பழமையானது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோயில் அருகே செல்லும் வராகநதியில் ஏராளமான பக்தர்கள் குளிக்கின்றனர். இப் பகுதியில் உத்திரகிரியை சடங்கு செய்யும் பகுதி உள்ளது. இதில் சாங்கியம் என பழைய துணிகளை வராகநதியில் தூக்கி வீசுகின்றனர். இதனால் அந்தப்பகுதி மாசுபட்டு நாற்றமடிக்கிறது. நகராட்சி பகுதிதுவங்கும் இந்தப்பகுதியில்
முன்பு வாரம் ஒரு முறை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்வார்கள். கடந்த சில மாதங்களாக தூய்மை பணி செய்யவில்லை. நகராட்சி நிர்வாகம் வராகநதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.