/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பன்னீர் திராட்சை விலை வரத்து குறைவால் உயர்கிறது பழம் இல்லாததால் விவசாயிகளுக்கு பயனில்லை
/
பன்னீர் திராட்சை விலை வரத்து குறைவால் உயர்கிறது பழம் இல்லாததால் விவசாயிகளுக்கு பயனில்லை
பன்னீர் திராட்சை விலை வரத்து குறைவால் உயர்கிறது பழம் இல்லாததால் விவசாயிகளுக்கு பயனில்லை
பன்னீர் திராட்சை விலை வரத்து குறைவால் உயர்கிறது பழம் இல்லாததால் விவசாயிகளுக்கு பயனில்லை
ADDED : பிப் 17, 2024 06:04 AM
கம்பம்: திராட்சை வரத்து குறைவால் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது. அதிகளவில் பன்னீர் திராட்சையும், கணிசமாக விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது . திராட்சை சாகுபடியில் முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிராவில் ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே செய்கின்றனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிற்கு 3 அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. விதையில்லா திராட்சை வரத்துள்ள நவம்பர் முதல் மார்ச் வரை விலை குறைவாக கிடைக்கும். அதன்பின் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்கும்.
தற்போது பன்னீர் திராட்சை விலை 10 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை இருந்தது. ஆனால் தற்போது வரத்து குறைய துவங்கியுள்ளதால் சில நாட்களாக விலை உயர்ந்து வருகிறது.
கிலோ ரூ. 40 முதல் 50 வரை கிடைக்கிறது. இந்த விலை உயர்வு தொடர்பாக திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில்,
சமீபத்திய மழை காரணமாக பன்னீர் திராட்சை தரத்தில் குறைபாடு உள்ளது. முக்கியமாக பனி ஆரம்பமாகி இருப்பதால் பொதுமக்கள் நுகர்வு குறைவாக இருந்தது. அடுத்து மஹாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை விலை குறைவாக இருந்தது.
தற்போது பன்னீர் திராட்சை வரத்து குறைந்துள்ளதாலும், மகாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை விலை அதிகமாக இருப்பதாலும், பொதுமக்கள் பன்னீர் திராட்சை பக்கம் திருப்பியுள்ளனர்.
எனவே,பன்னீர் திராட்சை விலை உயர்ந்து வருகிறது. ஆனால் தோட்டங்களில் பழம் இல்லாததால் விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வால் பெரிய அளவில் பயனில்லை என்றார்