தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மகசூல் குறைவால் மிளகு விலை கிலோ ரூ.1000 எட்டும்

மகசூல் குறைவால் மிளகு விலை கிலோ ரூ.1000 எட்டும்

மகசூல் குறைவால் மிளகு விலை கிலோ ரூ.1000 எட்டும்


UPDATED : அக் 14, 2026 07:12 PM

ADDED : அக் 14, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:12 PM ADDED : அக் 14, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: மகசூல் குறைவால் மிளகு விலை கிலோ ரூ.800ல் இருந்து ரூ.ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கறுப்பு தங்கம்என அழைக்கப்படுகிறது மிளகு. இது மருத்துவ குணம் கொண்டது. ஏலத் தோட்டங்களில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. தனியாகவும் சாகுபடியாகிறது. கேரளாவில் 85 ஆயிரம் எக்டேர் சாகுபடி பரப்பு தற்போது 70 ஆயிரம் எக்டேராக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தாண்டிக்குடி, சிறுமலை போன்ற மலைப்பகுதிகளில் சாகுபடியாகிறது. கேரளாவில் இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் அதிகம் சாகுபடியாகிறது. ஜுன் மற்றும் ஜூலையில் பூ பூக்கும். 150 நாட்களில் அறுவடை செய்யலாம். டிசம்பர் முதல் ஏப்ரல் வரை அறுவடை காலமாகும். இந்தாண்டு கோடையில் கிடைத்த மழை மகசூலை பாதித்ததால் மகசூல் குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கேரளாவில் ஆண்டிற்கு 41 ஆயிரம் டன் உற்பத்தி என்பது 30 ஆயிரம் டன்னாக குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தற்போது விலை கிலோ ரூ.800 வரை கிடைக்கிறது. 2024 ல் கிலோ ரூ.450 வரை தான் கிடைத்தது. இந்தாண்டு இன்னும் சில வாரங்களில் கிலோ ரூ.1000 தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தை போன்று கறுப்பு தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us