/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அடுத்த நடவடிக்கைக்கு அவகாசம் வழங்கினர்
/
ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அடுத்த நடவடிக்கைக்கு அவகாசம் வழங்கினர்
ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அடுத்த நடவடிக்கைக்கு அவகாசம் வழங்கினர்
ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அடுத்த நடவடிக்கைக்கு அவகாசம் வழங்கினர்
ADDED : நவ 06, 2024 05:21 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் நீதிமன்ற உத்தரவில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணும் வரை நடடிக்கை நிறுத்தி வைப்பதாக கூறி சென்றனர்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் 2333 சர்வே எண்ணில் 6.5 ஏக்கர் ஊருணி நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர்களின் குடியிருப்புகள், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், திருமண மண்டபங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான மேல்நிலை தொட்டிகள், நூலகம், போர்வெல்கள், ஆண்கள் பொதுக்கழிப்பறை ஆகியவை கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
ஊரணி ஆக்கிரமிப்பு குறித்து தனி நபர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
பொதுக்கழிப்பிடத்தை இடிக்க எதிர்ப்பு
ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் வினிதா, தலைமை எழுத்தர் ஜியோ கான் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் பொறுப்பு கீதா, எஸ்.ஐ.,மணிகண்டன் மற்றும் இருபதுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில் தனிநபர் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை துவக்கினர். கோயில் அரசு கட்டிடங்களை இடித்த பின் தனிநபர் கட்டிடங்களை இடிக்க மக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே தற்போது பயன்பாட்டில் உள்ள ஆண்கள் பொது கழிப்பறையை இடிக்கும் நடவடிக்கையை துவக்கினர்.
தினமும் 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் இந்த பொதுக் கழிப்பறையை இடிக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர். அப்போது பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரச்னை செய்தவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்ற போது பொதுமக்கள் தெருவில் அமர்ந்து அங்கிருந்து அவர்களை செல்ல விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.
சீராய்வு மனு செய்து தீர்வுக்கு வலியுறுத்தல்
இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்னும் 15 நாட்களில் இந்த நடவடிக்கைக்கு சீராய்வு மனு மூலம் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகள், போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

