/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூல வைகை வெள்ளத்தால் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
/
மூல வைகை வெள்ளத்தால் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
மூல வைகை வெள்ளத்தால் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
மூல வைகை வெள்ளத்தால் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
ADDED : அக் 21, 2025 04:03 AM

தேனி: மூல வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கண்டமனுார் ஆற்றுப் பாலத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்தது. அதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சில தினங்களுக்கு முன் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல பழைமையான, பெரிய அளவிலான மரங்கள் அடித்து வரப்பட்டன.
கண்டமனுார் ஆற்றுப்பாலம் பக்கவாட்டு தடுப்புச் சுவர்களில் இந்த மரங்கள் மோதின. இதனால் பாலத்தின் ஒருபகுதியில் தடுப்புச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து உடைந்தது.
இதனை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் அப்பகுதியில் கண்காணிப்பை வருவாய்த்துறை தீவிரப்படுத்த வேண்டும்.