/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சமூக விரோத கூடாரமாகும் வால்கரடு காப்புக் காடுகள்
/
சமூக விரோத கூடாரமாகும் வால்கரடு காப்புக் காடுகள்
ADDED : அக் 21, 2025 04:03 AM
தேனி: ''தேனியில் வனத்துறையின் வால்கரடு காப்புக்காடு பகுதியை சமூக விரோத செயல்களின் கூடாரமாக சிலர் மாற்றி வருகின்றனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி நகர் பகுதியில் வனத்துறையின் வால்கரடு பகுதி உள்ளது. இந்த காப்புகாடுகள் சிவாஜி நகர் பகுதி, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் பைபாஸ் ரோட்டில் இருபுறமும் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக உட்புகும் சமூக விரோதிகள் திறந்த வெளி மதுபாராகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் வனத்துறையினர் இந்த அசம்பாவிதங்களை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். சிலர் அவ்வழியாக டூவீலர்கள், நடந்து செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு, பின் வனப் பகுதிகளுக்குள் சென்று மறைவதும் தொடர்கிறது. வனத்துறையினர் இப்பகுதிகளில் தொடர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.
தேவை இன்றி வனப்பகுதிக்குள் அத்துமீறுபவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.