/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை
/
மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை
ADDED : அக் 19, 2024 04:37 AM
கம்பம் : பருவமழை தொடங்கியுள்ளதால் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும்.
மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் கனமழை பெய்தது.இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளது. டயர்கள் , சிரட்டைகள், பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
நல்ல தண்ணீரில் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் இன பெருக்கம் செய்யும். இதுவே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பாக மாறும்.எனவே உள்ளாட்சி அமைப்புகள் வீதிகளில் தண்ணீர் தேங்கிடாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் வீடுகளில் தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்த வேண்டும். இரு துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே வட கிழக்கு பருவ மழை காலத்தில் டெங்கு பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

