sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உள்ளம் ஒரு கோயில் உடம்பே ஆலயம் 

/

உள்ளம் ஒரு கோயில் உடம்பே ஆலயம் 

உள்ளம் ஒரு கோயில் உடம்பே ஆலயம் 

உள்ளம் ஒரு கோயில் உடம்பே ஆலயம் 


ADDED : நவ 14, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய நவநாகரீக கால மக்களின் வாழ்க்கை முறையில் துரித உணவு என்ற பெயரில் பொறித்த உணவுகளை உண்ணுதல், நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதும், சரியான துாக்கம் இன்மை, மன அழுத்தம், உடல் உழைப்புகள் இல்லாத காரணத்தால் உடம்பில் உள்ள செரிமான உறுப்புகள் சரிவர இயங்காமல் உணவு நன்றாக செரிக்காமல் உடம்பில் குளுக்கோஸ் அளவு கூடுதலாகவோ, குறைவாகவோ சுரப்பதே சர்க்கரை நோய்க்கான முக்கிய காரணம். இந்நோய் டைப் 1, டைப் 2 என இருவகையாக பிரிக்கப்படுகிறது.

டைப் 1 அறிகுறிகள், சிகிச்சை முறைகள்:

பெற்றோர்களிடத்தில் இருந்து பரம்பரையாக வரக்கூடியதாகும். இவ்வகையான சர்க்கரை நோய்க்கு இன்சுலின் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் அதிக தண்ணீர் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடம்பு இழப்பு, தொடர் பசி எடுத்தல் ஆகியவை.

டைப் 2 அறிகுறிகள், சிகிச்சை முறைகள்:

பாதிக்கப்பட்டவரின் உடல்நல விளைவுகளை ஏற்படுத்துவதோடு, முக்கிய உடல் உறுப்புக்களையும் பாதிக்கிறது. ரத்தத்தில் உள்ள அதிகபடியான குளுக்கோஸ், சிறுநீரகங்கள், ரத்த நாளங்கள், தோல் போன்றவைகளை பாதிக்கிறது. மேலும் ரத்த நாளங்களை சேதப்படுத்தி மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இவ்வகை பாதிப்பு உடல்பருமன், குறைந்த உடல்திறன் செயல்பாடு, துரித உணவு, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், மதுவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்வது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதும் இப்பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்பில் இருந்து பாதுகாக்க சர்க்கரையின் அளவை 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டும்.இன்சுலின் ஊசிக்குபதிலாக இன்சுலின் பம்ப் என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இனி வரும் காலங்களில் இதனை பயன்படுத்தி உடற்பயிற்சி, உணவு பழக்கங்களை மாற்றி, தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்து டாக்டரின் ஆலோசனைகள் படி சிகிச்சை எடுத்தால் நீண்ட ஆரோக்கியமான ஆயுளை பெற்று நலமுடன் வாழலாம். வருமுன் காப்போம், நலமுடன் வாழ்வோம்.

டாக்டர் ஆர்.ஜெகதீஸ்

எம்.பி.பி.எஸ்., எம்.டி., (பொது மருத்துவம்)

சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்,செல் : 94432 49558, 89032 61010






      Dinamalar
      Follow us