/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு துவக்கம்; இப்தார் நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்பு

ADDED : மார் 12, 2024 11:51 PM

தேனி : மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு துவக்கத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் முஸ்லிம் நாள்காட்டியின் ஒன்பதாவது மாதம், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன் ஒரு மாதம் முஸ்லிம்கள் நோன்பிருப்பர். அதிகாலை சாப்பிட்ட பின், மாலை சூரியன் மறையும் வரை, எதையும் சாப்பிட மாட்டார்கள். நீர், உமிழ்நீரை கூட உடலில் சேர்க்காமல் கடின நோன்பு இருப்பர். பின் மாலையில் நோன்புக் கஞ்சி குடித்து நோன்பு திறப்பது வழக்கம்.
தேனி சுப்பன்செட்டி தெருவில் உள்ள புதுப்பள்ளியில் நேற்று மாலை புனித ரம்ஜான் மாதத்தின் முதல் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இப்தார் நடந்தது.
தேனி ஜமாத் தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார். இதேபோல் கம்பம் பெரிய பள்ளி, அல்லிநகரம், ரத்தினா நகர், உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டியில் உள்ள பள்ளிவாசல்களில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.