/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீரில் மூழ்கிய வைகை அணை தரைப்பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
/
நீரில் மூழ்கிய வைகை அணை தரைப்பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
நீரில் மூழ்கிய வைகை அணை தரைப்பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
நீரில் மூழ்கிய வைகை அணை தரைப்பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
ADDED : ஜன 08, 2024 04:56 AM

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு அதிகம் இருப்பதால் வெளியேறும் நீர் தரைப்பலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் ஜன., 6ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்து நிரம்பி உள்ளது. கடந்த இரு நாட்களாக அணைக்கு உபரியாக வரும் நீர் பெரிய, சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து வெளியேறும் நீரின் அளவு தற்போது நிர்ணயம் செய்யப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடி முதல் 5000 கன அடி வரை இருப்பதால் வெளியேறும் நீர் அங்குள்ள தரைப் பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. வைகை அணையின் வலது, இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்களை சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகள் தரைப் பாலத்தின் வழியாக சென்று திரும்புவர். தற்போது தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் சுற்றுலாப் பயணிகள் ஒரு கி.மீ., தூரம் வரை சுற்றி பெரிய பாலம் வழியாக சென்று வருகின்றனர்.