ADDED : ஆக 19, 2025 12:54 AM
உத்தமபாளையம்,; ராயப்பன்பட்டியில் ஆலிலை பசுமை இயக்கத்தின் சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இந்த இயக்கத்தின் சார்பில் ஆண்டு விழா, குறுங்கவிதை நூல் வெளியீட்டு விழா, இயற்கை ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளி தாளாளர் பிரபாகர் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.
ஆலிலை பசுமை இயக்க தலைவர் மணி மாறன் எழுதிய ஆலிலை குறுங்கவிதைகள் நூலை பள்ளி தாளாளர் பிரபாகர் வெளியிட, தூர்தர்ஷன் முன்னாள் பொறியாளர் சுருளி சிக்கையன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பசுமை பரப்பை அதிகரிக்க மரங்களை நடவு செய்தும், குறுங்காடுகளை ஏற்படுத்தி வரும் உத்தமபாளையம் நன்செய் அமைப்பு, கூடலூர் சோலைக்குள் குயில், கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை போன்ற அமைப்புக்களின் சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
சினிமா நடிகர் ஜோமல்லூரி, சமூக ஆர்வலர்கள் குமரேசன், பஞ்சு ராஜா, அலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.