/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின்வாரிய ஊழியரின் டூவீலரில் புகுந்து மிரட்டிய பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
/
மின்வாரிய ஊழியரின் டூவீலரில் புகுந்து மிரட்டிய பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
மின்வாரிய ஊழியரின் டூவீலரில் புகுந்து மிரட்டிய பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
மின்வாரிய ஊழியரின் டூவீலரில் புகுந்து மிரட்டிய பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
ADDED : ஜன 08, 2024 05:41 AM
தேனி : தேனி டீக்கடைக்கு வந்த மின்வாரிய ஊழியரின் டூவீலரில் புகுந்த நான்கு அடி நீளம் உள்ள கொம்பேறி மூக்கன் வகை பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டு, வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
தேனி அருகே போடேந்திரபுரம் பெரியசாமி 50. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய துணை பண்டக சாலை பொறுப்பாளராக பணியாற்றுகிறார்.
வார விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தவர், நேற்று மதியம் தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள மெடிக்கல் கடையில் மருந்து மாத்திரை வாங்கினார். பின் எதிரே உள்ள டீக்கடைக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த சாக்கடை கால்வாயில் இருந்து ரோட்டை கடக்க முயன்ற கொம்பேறி மூக்கன் பாம்பு வழிதவறி, பெரியசாமியின் டூவீலரில் திடீரென புகுந்தது.
அலறிய பெரியசாமி துள்ளிக் குதித்ததால் டூவீலர் கீழே விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை தலைமை வீரர் செந்தில்மாயன், வீரர்கள் பாண்டிமுருகன், லோகேஷ், தங்கப்பாண்டியன் ஆகிய நால்வரும் டூவீலரில் புகுந்த பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மெயின் ரோடு என்பதால் பாம்பை காண பொதுமக்கள் கூடினர். இதனால் டூவீலரை அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கும் இளைஞர்கள் கூடினர். பின் டூவீலரின் பாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அகற்றிக் கொண்டிருந்த போது, திடீரென பாம்பு வெளியேறி ஓட முயன்றது.
அதனை வீரர்கள் பிடித்தனர். பின் தேனி வனச்சரக அலுவலர்களிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.