/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பிற்காக போக்குவரத்து மாற்றம்; ஒரிரு நாட்களில் அமலுக்கு வருகிறது
/
கம்பம் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பிற்காக போக்குவரத்து மாற்றம்; ஒரிரு நாட்களில் அமலுக்கு வருகிறது
கம்பம் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பிற்காக போக்குவரத்து மாற்றம்; ஒரிரு நாட்களில் அமலுக்கு வருகிறது
கம்பம் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பிற்காக போக்குவரத்து மாற்றம்; ஒரிரு நாட்களில் அமலுக்கு வருகிறது
ADDED : நவ 06, 2024 05:36 AM
கம்பம், : கம்பம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்வதால் போக்குவரத்தை மாற்றம் செய்வது கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கம்பம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி நகராட்சி சார்பில் ரூ.1.75 கோடியில் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள், அங்கு கடைகள் வைத்துள்ள வர்த்தகர்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால், அனைவரின் கருத்துக்களையும் கேட்டு முடிவு செய்ய நகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் வனிதா தலைமை வகித்தார். கமிஷனர் பார்கவி முன்னிலை வகித்தார். பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
கம்பம் பஸ் ஸ்டாண்டிற்கு ஒரு மணி நேரத்திற்கு 50 பஸ்கள் வந்து செல்வதாகவும், நாள் ஒன்றுக்கு 1017 பஸ்கள் வருகிறது. எனவே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது சிரமம் ஏற்படும் என்று தெரிவித்தனர்.
பின்னர் பஸ் ஸ்டாண்டிற்கு வடக்கு பகுதியில் தற்போது காமயகவுண்டன்பட்டிக்கு செல்ல பயன்படும் ரோடு வழியாக தேனி, மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் பஸ் ஸ்டாண்டை அடைவது என்றும், பஸ் ஸ்டாண்டிலிருந்து தேனி, மதுரை செல்லும் பஸ்கள் அமராவதி தியேட்டர், ஆடடி மனை வழியாக சென்று மெயின் ரோட்டை அடைவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது காமயகவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள 60 அடி ரோட்டை தற்காலிகமாக அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்படுவதாகவும், ஓரிரு நாட்களில் அந்த பணிகள் முடித்ததும், இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் முதலில் கிழக்கு பகுதியிலும் பின் மேற்கு பகுதியிலும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் - போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத நிலை ஏற்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார். கூட்டத்தில் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து கழக ஆய்வாளர் சுந்தராமன், ் போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.

