/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சளாறு அணை அருகே வசித்தும் உவர்ப்புநீரை பருகும் அவலம் ராசிமலை பழங்குடியினர் வசதிகள் இன்றி தவிப்பு
/
மஞ்சளாறு அணை அருகே வசித்தும் உவர்ப்புநீரை பருகும் அவலம் ராசிமலை பழங்குடியினர் வசதிகள் இன்றி தவிப்பு
மஞ்சளாறு அணை அருகே வசித்தும் உவர்ப்புநீரை பருகும் அவலம் ராசிமலை பழங்குடியினர் வசதிகள் இன்றி தவிப்பு
மஞ்சளாறு அணை அருகே வசித்தும் உவர்ப்புநீரை பருகும் அவலம் ராசிமலை பழங்குடியினர் வசதிகள் இன்றி தவிப்பு
ADDED : ஜூலை 09, 2025 06:55 AM

-தேவதானப்பட்டி: மஞ்சளாறு அணை நீர் பல பகுதிகளுக்கு குடிநீராக பயன்பட்டாலும் இந்த அணை அருகே வசிக்கும் ராசிமலை பழங்குடியினர் 25 ஆண்டுகளாக உவர்ப்பு நீரை குடிக்கும் அவலம் தொடர்கிறது.
தேவதானப்பட்டி பேரூராட்சி 5 வது வார்டு மஞ்சளாறு அணையிலிருந்து ஒரு கி.மீ., தூரத்தில் ராசிமலை பழங்குடியினர் காலனி உள்ளது. இங்கு நுாற்றுக்கும் அதிகமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கை முறை மலைகள், மரங்களில் ஏறி தேன், கிழங்கு எடுத்தல், தென்னை ஓலைகளில் துடைப்பம் தயார் செய்தல், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்திலிருந்து இரு ஆண்டுகளுக்கு முன் ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் 32 வீடுகள் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பழங்குடியின மக்கள் குடியேறினர். இதில் சில வீடுகளில் மேற்கூரை உடைந்தும், சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை மராமத்து செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் சாக்கடை தூய்மை இல்லாமல் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் சென்றாயன், சாந்தி, குமார், தினேஷ் கூறியதாவது:
எங்கள் முன்னோர்கள் உயரமான பாறைகள் நடுவே வசித்தனர். எங்கள் பெற்றோர் கூரை அமைத்து வசித்தனர். கால மாற்றத்தால் எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு வீடு வழங்கியுள்ளது. நாங்கள் துாங்கி எழுந்து கண் விழிப்பது மஞ்சளாறு அணையில்தான். பல ஊர்களுக்கு மஞ்சளாறு அணை நீர் குடிநீராக செல்கிறது. ஆனால் 25 ஆண்டுகளாக உவர்ப்பு நீர் குடிக்கிறோம். இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கல்லடைப்பு, உடல் உபாதைகளால் பாதிக்கின்றோம். மஞ்சளாறு அணை குடிநீர் வழங்க கோரி செயற்பொறியாளர், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
ரேஷன் பொருட்கள் பெற 14 கி.மீ., நடை பயணம்
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்தவர்கள் மாதம் இரு முறை இந்தப்பகுதியில் நடமாடும் ரேஷன் கடை செயல்படும் என்றனர். இது வரை வரவில்லை. இதனால் தேவதானப்பட்டி 4 நம்பர் கடையில் 14 கி.மீ., நடந்து சென்று பொருட்களை வாங்கி வருகிறோம். ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை மட்டுமே தருகின்றனர். சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை தருவதில்லை. 5 லிட்டர் மண்ணெய்க்கு 3 லிட்டர் மட்டுமே வழங்குகின்றனர். பழங்குடியினர் நலத்துறை சார்பில் 'தொல்குடி' திட்டத்தில் குடியிருப்பு பகுதியில் வடிகாலுடன் கூடிய தடுப்பு சுவர் கட்டுமானப்பணி கீழ் பகுதி குடியிருப்பு பகுதியில் கட்டவில்லை. இதனால் மழை காலங்களில் மண்சரிவு ஏற்படுகிறது. அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களை தேடி வராத மருத்துவம்
எங்கள் பகுதியில் மாதம் ஒரு முறை மக்களைத்தேடி மருத்துவம் முகாம் நடத்தவேண்டும். எங்களின் 'துயர்நிலை' கேட்டு மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும்.
குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு இருந்தும் எரிவதில்லை. குடியிருப்பு பகுதியில் மேற்கூரை மராமத்து பணிகள் செய்ய வேண்டும். மேலும் சாக்கடை ஒட்டியுள்ள பகுதிகளில் பணிகளை முடிக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள், கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.