/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நின்ற லாரியில் மோதி டூவீலரில் சென்றவர் பலி
/
நின்ற லாரியில் மோதி டூவீலரில் சென்றவர் பலி
ADDED : செப் 25, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : மதுரை சுப்பிரமணியபுரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் அல்லாபக்ஸ் 41, மதுரையில் தனியார் பீரோ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மனைவி,இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் கம்பத்தில் தனது தாயார் வீட்டில் இருந்த இவரது மனைவியை பார்க்க டூவீலரில் மதுரையில் இருந்து கம்பம் சென்றார். இரவு 8:00 மணிக்கு ஆண்டிபட்டி கணவாய் அருகே சென்றபோது ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மனைவி ரூபியாபானு புகாரில் லாரி டிரைவர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மகாராஜா 22, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.