ADDED : டிச 27, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்யாத நிலையில் வைகை அணையில் 64.47 அடி உயரமும், முல்லைப் பெரியாறு அணையில் 128.70 அடியும், மஞ்சளாறு அணையில் 54.30 அடியும், சோத்துப்பாறை அணையில் முழு கொள்ளளவிலும், சண்முகாநதி அணை 50.70 அடி உயரத்திலும் நீர்மட்டம் உள்ளது.
இனிவரும் நாட்களில் மழை பெய்தால், நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.