/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்வரத்து வாய்க்காலை துார்வார துவங்கிய நீர்வளத்துறை
/
நீர்வரத்து வாய்க்காலை துார்வார துவங்கிய நீர்வளத்துறை
நீர்வரத்து வாய்க்காலை துார்வார துவங்கிய நீர்வளத்துறை
நீர்வரத்து வாய்க்காலை துார்வார துவங்கிய நீர்வளத்துறை
ADDED : அக் 14, 2024 08:00 AM
தேனி : சோத்துப்பாறை அணை ஆயக்கட்டு பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாய்க்காலை துார்வாரி சுத்தப்படுத்தும் பணியை நீர்வளத்துறை துவங்கி உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து வரும் அக்.16ல் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் மூலம் கைலாசபட்டி, சருத்துப்பட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இந்நிலையில் வாய்க்கால் முழுவதும் செடி கொடிகள் படர்ந்து புதர் மண்டி இருப்பதோடு பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மண்மேடுகளும் காணப்பட்டன. இதனால் பாசனத்திற்கு நீர் திறக்கும் பொழுது நீர் செல்வதில் தடை ஏற்படும் என்பதால் பாசன விவசாயிகள் வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்றி தூர்வார வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனை அடுத்து பாசனத்திற்கு நீர் திறக்க 3 நாட்கள் உள்ள நிலையில் பெரியகுளம் பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதிய ஆயக்கட்டு பாசன வாய்க்காலில் உள்ள செடி கொடிகள், அடர்ந்த புதர், மண்மேடு கிளை அகற்றி பாசன வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.