/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலையில் மின்கோபுரங்களின் உயரம் அதிகரிக்கும் பணி வனத்துறையால் பாதிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டும் வனத்துறை அனுமதி மறுப்பு

ADDED : ஆக 08, 2025 10:20 PM
கம்பம்:மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் வழியாக செல்லும் பெரியாறு -- கயத்தாறு மின்வழித் தடத்தில் உள்ள மின்கோபுரங்களின் உயரத்தை அதிகரிக்கும் பணியை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டும், வனத்துறை இடையூறு செய்வதால் பணி தேக்க நிலையில் உள்ளது.
லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையம், சுருளியாறு நீர்மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், கயத்தாறு மின்கிரிட்டுக்கு செல்லும்.
மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக, உயர்மின் அழுத்த வழித்தடம் உள்ளது.
பெரியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு வரை, 114 கோபுரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 100 அடி உயரம்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெண்ணியாறு வனப்பகுதி மின்கோபுரத்தை காட்டு யானை ஒன்று தொட்ட போது மின்சாரம் தாக்கி பலியானது. மேலும், அதே இடத்தில் நான்கு யானைகள் பலியாகின.
இது குறித்த பொதுநல வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் அப்போது தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி, வனப்பகுதியில் செல்லும் மின் கோபுரங்களின் உயரத்தை உயர்த்த உத்தரவிடப்பட்டது.
மின் வாரியம் 10 கோபுரங்களின் உயரத்தை, தரையில் இருந்து மின் ஒயரின் கீழ் பாகம் வரை, 27 அடிக்கு உயர்த்தினர். தொடர்ந்து, வெள்ளிமலை பகுதியில் நான்கு கோபுரங்களின் உயரத்தை அதிகரிக்கும் பணியை செய்ய முடியாத நிலையை வனத்துறை ஏற்படுத்தியது.
அதிக எடையுள்ள இரும்பு தளவாடங்களை தலைச்சுமையாக எடுத்துச் செல்வது இயலாத காரியம். இங்கு டிராக்டர் செல்வதற்கு பாதை வசதி உள்ளது.
டிராக்டரில் கொண்டு செல்ல அனுமதியுங்கள் என வாரிய அதிகாரிகள் கெஞ்சியும் அனுமதிக்கவில்லை. இதனால் பணிகள் தேக்கமடைந்துள்ளன.