நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் 50, இவரது மகள் பூஜா 21, ஆண்டிபட்டியில் தனியார் பயிற்சி மையத்தில் கம்ப்யூட்டர் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.
கம்ப்யூட்டர் மையத்திற்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தந்தை ரமேஷ் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.