/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அண்ணன் கண் முன்னே நீரில் சிக்கிய தம்பி பலி
/
அண்ணன் கண் முன்னே நீரில் சிக்கிய தம்பி பலி
ADDED : ஜன 22, 2024 05:50 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே வைகை பேரணை இணைப்பு ஆற்றில் அண்ணன் கண் முன்னே தம்பி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி வேன் டிரைவர் மனோஜ் 21. இவரது தம்பி விஜய் 19.
ஜெயமங்கலம் பகுதியில் பார்சலை நேற்று முன்தினம் இறக்கிவிட்டு, வைகை பேரணை இணைப்பில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். வாகனத்தில் இருந்த கயிற்றினை பிடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கிய விஜய் தண்ணீர் குடிக்கும் போது, கை நழுவி கயிற்றின் பிடியை நழுவவிட்டார். அதிகளவில் செல்லும் இழுவை தண்ணீரில் சிக்கினார். விஜயை காப்பாற்றும் முயற்சியில் மனோஜ் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் மனோஜ் கண்முன்னே விஜய் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வரை பெரியகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் தேடினர்.
இந்நிலையில் இறந்த நிலையில் விஜயின் உடல் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி ஆற்றில் நேற்று மதியம் 1:00 மணிக்கு மீட்கப்பட்டது. ஜெயமங்கலம் எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை விசாரிக்கிறார்.