/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளையுடன் நிறைவடையும் தேக்கடி மலர் கண்காட்சி
/
நாளையுடன் நிறைவடையும் தேக்கடி மலர் கண்காட்சி
ADDED : ஏப் 19, 2025 01:16 AM

கூடலுார்:
தேக்கடியில் நடந்து வரும் மலர் கண்காட்சி நாளையுடன் (ஏப்.20) நிறைவு பெறுகிறது.
தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 17வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் மார்ச் 28ல் துவங்கியது.
கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.
வண்ண விளக்குகள், வேளாண் கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள், பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம், வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சி, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், இன்னிசை கச்சேரி, நடன நாட்டியம், காமெடி அரங்குகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
நுழைவுக் கட்டணம் ரூ.70 ஆகும். காலை 10 மணி முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது.
பள்ளி மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
கேரளா தமிழக பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
22 நாட்கள் நடந்த இக்கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுவதாக ஒருங்கிணைப்பாளர் தாமஸ் தெரிவித்தார்.