/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி - -மதுரை பயணிகள் விரைவு ரயில் குறைந்தபட்ச டிக்கெட்டில் ரூ.10 குறைப்பு

ADDED : பிப் 28, 2024 05:36 AM
தேனி : மதுரை -- போடி பயணிகள் விரைவு ரயிலில் நேற்று முதல் குறைந்த பட்ச பயண கட்டணமாக ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை -போடி பயணிகள் விரைவு ரயில் இரு மார்க்கமாக இயங்குகின்றன. குறைந்த பட்ச சாதாரண கட்டணம் ரூ.10 என குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை -போடி கட்டணம் தற்போது ரூ.25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை முதல் உசிலம்பட்டி ரூ.10, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி ரூ.10, உசிலம்பட்டி முதல் தேனி ரூ.10, உசிலம்பட்டி முதல் போடி ரூ.15, தேனி முதல் போடி ரூ.10 என குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை மாவட்ட மக்கள், மாணவர்கள், பயனடைவர். மதுரை கோட்டத்தில் இயங்கும் பயணிகள் ரயில்களில் மட்டுமே இத்திட்டம் நேற்று முதல் அமலாகியுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் சீசன் டிக்கெட் பயனாளர்கள், பிற பயண சலுகை பெறுபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.