/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் சுகாதாரம் பாதிப்பு ஒப்பந்த நிறுவன நீட்டிப்பு நிறுத்தம் தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் முடிவு
/
தேனியில் சுகாதாரம் பாதிப்பு ஒப்பந்த நிறுவன நீட்டிப்பு நிறுத்தம் தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் முடிவு
தேனியில் சுகாதாரம் பாதிப்பு ஒப்பந்த நிறுவன நீட்டிப்பு நிறுத்தம் தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் முடிவு
தேனியில் சுகாதாரம் பாதிப்பு ஒப்பந்த நிறுவன நீட்டிப்பு நிறுத்தம் தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் முடிவு
ADDED : அக் 26, 2024 07:16 AM

தேனி: தேனியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் துாய்மை பணிக்கான தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் நீட்டிப்பை நிறுத்தி வைக்க கவுன்சிலர்கள் கோரியதால் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் தலைவர் ரேணுப்பிரியா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் செல்வம், நகராட்சி பொறியாளர் குணசேகரன், உதவிப் பொறியாளர் முருகன், மேலாளர் முருகேசன், நகர் நல அலுவலர் டாக்டர் கவிப்ரியா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
கிருஷ்ணகிரபா, 5வது வார்டு: 1989 தேனி நகராட்சியில் 24 வார்டுகள் இருந்தன. அப்போது 280 துப்புரவு பணியாளர்கள் இருந்தனர். தற்போது 33 வார்டுகள் இருந்தும் 140 பேர் மட்டுமே உள்ளதால் துப்புரவு பணிகள் மோசமாக உள்ளது.
சுகாதார அலுவலர் ஜெயராமன்: தசரா, தீபாவளிக்காக ஒப்பந்த பணியாளர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். தீபாவளிககு பின் நிலைமை சீராகும் என்றார். இதற்கு கவுன்சிலர்கள் ராஜ்குமார், மணிகண்டன், அய்யனார்பிரபு, அனுசியா, கிருஷ்ணபிரபா, ஆனந்தி, சுப்புலட்சுமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். முறையாக பணி செய்யாத ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய கோரி வலியுறுத்தினர்.
கிருஷ்ணகுமாரி: இந்நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய முன்பே வலியுறுத்தினோம். தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.
துணைத் தலைவர்: குப்பை சேகரிப்பு பிரச்னை அதிகரித்துள்ளதால் இதனை தனியாக விவாதிக்கலாம். எனவே, தலைவர் இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
தலைவர்: துாய்மை பணிக்கான தனியார் நிறுவன ஒப்பந்த தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
மணிகண்டன்: 11வது தீர்மானத்தில் பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திற்கு தேவையான 125 குதிரைத்திறன் மோட்டார் வாங்க ரூ.33 லட்சத்து 20 ஆயிரம் என்பது அதிகம். ரூ.13 லட்சத்தில் மோட்டார் வாங்கலாம். இதனால் நகராட்சிக்கு ரூ.20 லட்சம் மிச்சமாகும் என கூறி இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
குணசேகரன், பொறியாளர்: ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளியில் குறைந்த மதிப்பீட்டில் கோரிய நிறுவனத்திற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தலைவர்: தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் டூவீலர் ஸ்டாண்ட் இடையூறாக உள்ளது.
துணைத்தலைவர்: அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
தலைவர்: பழைய பஸ் ஸ்டாண்ட் டூவீலர் ஸ்டாண்டில் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்த தீர்மானம் ரத்து செய்யப்படும் என்றார். கூட்டத்தில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.