/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பஸ் ஸ்டாண்ட்- ரயில்வே கேட் ரோட்டில் மேம்பால பணி துவக்கம்
/
தேனி பஸ் ஸ்டாண்ட்- ரயில்வே கேட் ரோட்டில் மேம்பால பணி துவக்கம்
தேனி பஸ் ஸ்டாண்ட்- ரயில்வே கேட் ரோட்டில் மேம்பால பணி துவக்கம்
தேனி பஸ் ஸ்டாண்ட்- ரயில்வே கேட் ரோட்டில் மேம்பால பணி துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 12:19 AM

தேனி:தேனியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே கேட் செல்லும் ரோட்டில் பணிகள் துவங்கியது.
தேனி நகர் பகுதியில் மதுரைரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.90 கோடி செலவில் இப்பணிகள் இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இந்த மேம்பாலத்தில் தேனி நகர்பகுதி, மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே, கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே என மூன்று இடங்களில் இருந்து வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் அமைகிறது.
பாலத்தின் இரு பகுதிகளில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பணிகள் துவங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே கேட் ரோட்டில் மேம்பாலத்திற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கினர். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இப்பகுதியில் நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.