/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பிஸ்னஸ் போரம் 6வது பார்வையாளர்கள் கூட்டம்
/
தேனி பிஸ்னஸ் போரம் 6வது பார்வையாளர்கள் கூட்டம்
ADDED : டிச 22, 2024 09:29 AM

தேனி : தேனி பிஸ்னஸ் போராத்தின் வியாபார வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம், மெகா பார்வையாளர்கள் கூட்டம் தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடந்தது. போரத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். போரத்தின் இயக்குநர் மாஸ்டர் சேப்டி நிறுவனர் முத்துசெந்தில் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வணிகள் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் செல்வக்குமார் பங்கேற்றார். முன்னாள் தலைவர் அருண்குமார் வரவேற்றார். முன்னாள் தலைவர் வெங்கடேஷ், என்.பி.ஆர்., தங்கமாளிகை சத்யநாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தினர்.
செல்வகுமார் பேசியதாவது: தேனி பிஸ்ன்ஸ் போரம் தொழில் முனைவர்கள் அனைவருக்கும்பயனுள்ளதாக இருக்கும். இந்த போரத்தில் 90க்கும் மேற்பட்ட தொழில் முனைவர்கள் உறுப்பினர்களாக இருப்பது சிறப்பானது. ஒரே இடத்தில் இணைந்து வியாபார வளர்ச்சியை மேம்படுத்துவது வியாபார நண்பர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்றார்.
போரத்தின் இயக்குநர் முத்து செந்தில் பேசுகையில், 'இந்த போரத்தில் 90 விதமான வியாபாரம் செய்பவர்கள் உள்ளனர். ஒரு தொழில் ஈடுபட்டுள்ள ஒருவர் மட்டும் உள்ளார். உறுப்பினர்களின் ஒற்றுமையே வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது,'என்றார். விழாவில் பட்டயத்தலைவர் பால்பாண்டி, தேனி பிஸ்னஸ் போரத்தின் செயலாளர் அய்யம்பெருமாள், பொருளாளர் ரஞ்சித், நிர்வாகிகள் ராமநாதன், பிரதீப்செல்லதுரை, ஆனந்த்பாபு, சூரஜ்குமார், போர்ஸ் டீம் உறுப்பினர்கள் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். போரத்தின் உறுப்பினர்கள், வணிகள் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.