/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பிஸ்னஸ் போரத்தின் 3வது 'எக்ஸ்போ'; கலெக்டர் துவக்கி வைத்தார்
/
தேனி பிஸ்னஸ் போரத்தின் 3வது 'எக்ஸ்போ'; கலெக்டர் துவக்கி வைத்தார்
தேனி பிஸ்னஸ் போரத்தின் 3வது 'எக்ஸ்போ'; கலெக்டர் துவக்கி வைத்தார்
தேனி பிஸ்னஸ் போரத்தின் 3வது 'எக்ஸ்போ'; கலெக்டர் துவக்கி வைத்தார்
ADDED : ஆக 17, 2025 12:16 AM

தேனி; தேனி என்.ஆர்.டி., நகர் மண்டபத்தில் தேனி பிஸ்னஸ் பேராத்தின் 3வது 'பிஸ்னஸ் எக்ஸ்போ 'நேற்று துவங்கியது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் எக்ஸ்போவை துவக்கி வைத்தார். பிஸ்னஸ் போரத்தின் நிர்வாக இயக்குநர் முத்து செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் என்ஜினியர் ராதாகிருஷ்ணன், டாக்டர் கணேசன், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, கட்டட பொறியாளர்கள் சங்க தலைவர் நவுசாத், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் செல்வக்குமார் குத்து விளக்கேற்றினர்.
இவர்களுக்கு பிஸ்னஸ் போரத்தின் பட்டயதலைவர் பால்பாண்டி, நிர்வாக த லைவர் பிரதீப்செல்லதுரை, செயலாளர் ஆனந்த்பாபு, பொருளாளர் ராமநாதன் மரியாதை செய்தனர். கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி இலவசம். பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன் இலவசமாக வழங்கப்படும். கண்காட்சி இன்று இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
கண்காட்சியில் ஸ்ரீராமா மெட்டல் ஸ்டோர்ஸ், எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ், எஸ்.எஸ்.ஆர்., ஆயில், கிருஷ்ணா டிபார்ட்மென்ட் ஸ்டோர், பில்டிங் டாக்டர், கனிபல்கிளினிக், ரீச் அகாடமி, அக்வாமேக்ஸ் வாட்டர் சர்வீஸ், ட்ரை ப்ரூட்ஸ் சக்ரா என்டர் பிரைசஸ், கேர் பரிசோதனை நிலையம், வைகை ஆப்டிக்கல்ஸ், அரசன் மொபைல்ஸ், என்.பி.ஆர்., தங்கமாளிகை, சரண் போட்டோ ஸ்டுடியோ, டி.என்.60கார்கேர், மயிரா ஹோம் அப்ளைன்ஸ், பியூச்சர்வே, கம்ப்யூட்டர், வி ஸ்கொயர், மாஸ்டர் சேப்டி சி.சி.டி.வி., நிறுவனம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜோதிட நிலையம், ஜஸ்ட் டோர், ஜிடெக் கம்யூட்டர் சென்டர், இராமநாதன் பைப்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மதுரை மீனாட்சி ஹோண்டா ஏஜென்சி, இன்பிரீயல் பேட்டரிஸ், பிரிண்ட் பீஸ், அழகாச்சி ஹெர்பல், ரியோகர்டன்ஸ், யூவி ஹோம்கேர் நர்சிங், வாசு இண்டஸ்ட்ரி, சன்பேக்ஸ், தேனி கல்வி மையம், பாபு கோல்டு கவரிங் நகைகள், சி.எப்., இண்டீரியர் டிசைனர், ஸ்ரீகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ், டி.டி.ஜி., வாகன கண்ணாடி ஷோரூம், கே.ஆர்.,ராஜா டிரைவிங் ஸ்கூல், தேவா கார் அக்சசரிஸ், தேவா பர்னிச்சர்ஸ், அன்னை பேக்கரி, கர்னாஸ் குடும்ப உணவகம் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி, பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை முன்னாள் தலைவர்கள் ஜெனரேட்டர் அருண், பாலகிருஷ்ணன், வெங்கடேஷ், அருண் சிவக்குமார், நிர்வாக உறுப்பினர்கள் விஜயகுமார், செல்வராஜ், ராஜாமுகமது, சரவணன், எஸ்.ஆர்., வெங்கடேஷ் செய்தனர்.