/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பிஸினஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பதவி ஏற்பு
/
தேனி பிஸினஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பதவி ஏற்பு
தேனி பிஸினஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பதவி ஏற்பு
தேனி பிஸினஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பதவி ஏற்பு
ADDED : ஏப் 13, 2025 05:26 AM

தேனி, : தேனி பிஸினஸ் போரத்தின் புதிய நிர்வாக்குழுவினர் பதவி ஏற்பு விழா தேனியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு போரத்தின் இயக்குனர் மாஸ்டர் சேப்டி இயக்குனர் முத்துசெந்தில் தலைமை வகித்தார். பியூச்சர்வே கம்ப்யூட்டர் பால்பாண்டி முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகக்குழு தலைவராக நேஷனல் வாட்டர் நிர்வாகி பிரதீப்செல்லதுரை, செயலாளராக ரீச் அகாடமி நிர்வாகி ஆனந்தபாபு,பொருளாளராக இராமநாதன் பைப் எலக்ட்ரிக்கல்ஸ் நிர்வாகி ராமநாதன், ஒருங்கிணைப்பாளராக ஜிடெக் கம்ப்யூட்டர் உரிமையாளர் சரவணன், அரங்க ஒருங்கிணைப்பாளராக ஆர்.ஓ., வாட்டர் உரிமையாளர் ராஜா, நல்லுறவு தொடர்பாளராக எஸ்.ஆர்.ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ், வணிக மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளராக வி.ஸ்கொயர் ரியல் எஸ்டேட் உரிமையாளர்விஜய்குமார், வணிக விளக்கவுரை ஒருங்கிணைப்பாளராக யுவி ஹோம் கேர் நிர்வாகி செல்வராஜ், அணித் தலைவர்களாக கணேசன், ரெங்கராஜன், முத்துக்குமார், அரசமணிகண்டன், வினோத்குமார், பிரகாஷ், பெத்தனராஜன், வி2 வெங்கடேஷ், அருண்பாண்டியன், தினேஷ், விக்னேஷ்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்த புதிய நிர்வாகக்குழு இவ்வாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 2025 வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. ஷான் ஹோட்டல் நிறுவனர் ரெங்கசாமி சிறப்புரை ஆற்றினார். ஏற்பாடுகளை முன்னாள் தலைவர்கள் அருண், வெங்கடேஷ், அருண்குமார், பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்கள், அணித்தலைவர்கள் செய்திருந்தனர்.

