/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாள்தோறும் நடைபயிற்சியுடன் மாடித்தோட்டப் பராமரிப்பு; கவனத்தை ஈர்க்கும் தேனி தம்பதி
/
நாள்தோறும் நடைபயிற்சியுடன் மாடித்தோட்டப் பராமரிப்பு; கவனத்தை ஈர்க்கும் தேனி தம்பதி
நாள்தோறும் நடைபயிற்சியுடன் மாடித்தோட்டப் பராமரிப்பு; கவனத்தை ஈர்க்கும் தேனி தம்பதி
நாள்தோறும் நடைபயிற்சியுடன் மாடித்தோட்டப் பராமரிப்பு; கவனத்தை ஈர்க்கும் தேனி தம்பதி
ADDED : நவ 03, 2025 04:23 AM

'மாடித்தோட்டத்தின் பராமரிப்பு பணிகளை காலை நடைபயிற்சியுடன் தினமும் மேற்கொள்கிறேன்.' என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ரத்தினம் நகர் 4வது தெரு மைதிலி. இவருக்கு உறுதுணையாக மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறார் இவரது கணவரும் ஆசிரியருமான உலகராஜா.
வீட்டில் இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி செய்து சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கு ஏற்பட துவங்கி உள்ளது.
சிலர் தங்கள் வீட்டின் அருகில் காலியாக உள்ள இடங்கள், மாடியில் என வீட்டின் சிறிய அளவில் தொட்டிகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகளை வளர்த்து, அதனை பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது.
ரத்தினம் நகர் 4வது தெருவில் மேற்குறிப்பிட்ட தம்பதி வசிக்கும் வீட்டின் மாடியில் பொன்னாங்கன்னி உள்ளிட்ட கீரை வகைகள், மஞ்சள், எலுமிச்சை, லெமன்கிராஸ், பல்வேறு வகையான முல்லை, மல்லிகை உள்ளிட்ட பூச்செடிகள், பாகற்காய் கொடி, தக்காளி, மிளகாய், கத்தரி உள்ளிட்ட செடிகள் வளர்க்கப்பட்டு, நிழற்வலை அமைத்து செடிகளை பராமரித்து வருகின்றனர்.
இதனால் அதிக அளவில் வெயில் இருந்தாலும் செடிகள் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கின்றனர்.
பறவைகளுக்கு தண்ணீர் மைதிலி, இல்லத்தரசி, ரத்தினம் நகர்: வீட்டு மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைக்க வேண்டும் என ஆசை இருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன் சிறிய, சிறிய தொட்டிகளில் செடிகள் வளர்க்க துவங்கினேன்.
மாடியில் குறிப்பிட்ட இடத்தில் நிழற்வலை அமைத்தோம். அதனடியில் தற்போது செடிகள் வைத்து பராமரிக்கிறோம். மாடிதோட்டத்தில் விளைந்த காய்கறிகளில் சமையல் செய்யும் போது கூடுதல் மகிழ்ச்சியை உணர முடிகிறது.
மேலு ம் செ டிகள் வளர்க்க அரிசி கழுவிய தண்ணீர், டீ துாள், பயன்படுத்திய முட்டைகளின் ஓடுகள், தேங்காய் நார் உள்ளிட்டவற்றை உரமாக பயன்படுத்துகிறேன்.
வெளியூர் செல்லும் போது, சில நாற்றுகள் விற்பனை செய்யும் இடங்களில் செடிகள் வாங்கி வந்து நட்டு பராமரிக்கிறேன்.
தி னமும் காலையில் மாடியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போதே செடிகள் பராமரிப்பில் ஈடுபடுகிறேன். இதனால் உடல் நலத்துடன், மன அமைதியும் ஏற்படுகிறது.
மாடி தோட்டத்தில் தொங்கும் பிளாஸ்டிக் அமைப்புகள் வைத்துள்ளேன். அதில் தினமும் நீர் நிரப்புவேன். அதனை அணில், பறவைகள் பருகும். இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்., என்றார்.
வகுப்புகளில் விழிப்புணர்வு உலகராஜா, ஆசிரி யர், ரத்தினம் நகர்: வீட்டு மாடியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள லெமன் கிராஸ் மூலிகையில் அடிக்கடி டீ வைத்து அருந்துவோம்.
இது புத்துணர்ச்சி தருகிறது. மேலும் வகுப்பில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் எவ்வாறு அமைப்பது, அதனை எவ்வாறு பராமரிப்பது என விளக்குகிறேன்.
இது தவிர நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் மாடித்தோட்ட செடிகளை பராமரிக்கிறேன். அருகில் வசிப்பவர் களுக்கும் மாடித்தோட்டம் அமைக்க ஊக்கப்படுத்தி வருகிறேன் என்றார்.

