/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண், காய்ப்பு திறன் பரிசோதனைக்கு ஏல விவசாயிகள்... வலியுறுத்தல்; 'ஸ்பைசஸ்' வாரியம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
/
மண், காய்ப்பு திறன் பரிசோதனைக்கு ஏல விவசாயிகள்... வலியுறுத்தல்; 'ஸ்பைசஸ்' வாரியம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
மண், காய்ப்பு திறன் பரிசோதனைக்கு ஏல விவசாயிகள்... வலியுறுத்தல்; 'ஸ்பைசஸ்' வாரியம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
மண், காய்ப்பு திறன் பரிசோதனைக்கு ஏல விவசாயிகள்... வலியுறுத்தல்; 'ஸ்பைசஸ்' வாரியம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
UPDATED : நவ 03, 2025 06:02 AM
ADDED : நவ 03, 2025 04:22 AM

கம்பம்:  ''ஏலத்தோட்டங்களில் மண் வளம், காய்ப்புத் திறன் பரிசோதனைகள் செய்யவும், மழையை தாங்கி நிற்கும் ரகங்களை அறிமுகம் செய்து ஏல  விவசாயிகளுக்கு உதவவும் ஸ்பைசஸ் வாரியம் முன்வர வேண்டும்.'' என, ஏல விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இடுக்கியில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி ஆகிறது. வளைகுடா நாடுகள் இந்திய ஏலக்காயை விரும்பி கொள்முதல் செய்கின்றன. குணம், கலர், அளவுகள் ஆகிய அம்சங்களில் இந்திய ஏலக்காய் முதலிடம் பெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் நல்லாணி என்ற ரகம் சாகுபடியாகிறது. நடவு செய்யும் செடிகள் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு காய்க்கும். ஒராண்டிற்கு 6 முறை மகசூல் எடுப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மகசூல் ஏக்கருக்கு 600 கிலோ என இருந்தது. தற்போது 400 கிலோ என குறைந்துள்ளது. இதற்கு சீதோஷ்ண நிலை மாற்றம், பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குன்றியது காரணமாக உள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு உடுப்பன் சோலை இடுக்கி தாலுகாக்களில் 19 கிராமங்களில் மண் பரிசோதனை செய்து அதன் விபரங்களை ஸ்பைசஸ் வாரியம் வெளியிட்டது. அதை  மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தி ஏலத்தோட்டங்கள் முழுமையும் மண் பரிசோதனை செய்து, குறைந்து வரும் காய்ப்புத் திறனை அதிகரிக்க, ஸ்பைசஸ் வாரியமும், ஏலக்காய் ஆராய்ச்சி நிலையங்களும் முன்வர வேண்டும். திடீர் சீதோஷ்ண நிலை மாற்றங்களால் ஏற்படும் மகசூல் பாதிப்பை தடுக்க முடியாது. ஆனால் மண் பரிசோதனைகள் மூலம் என்ன சத்துங்கள் குறைந்திருக்கின்றன. என்ன சத்துக்கள் தேவை என்பதை கண்டறிந்து, உரம் பூச்சி மருந்துகள் பயன்படுத்த ஆலோசனைகள் வழங்கலாம். மேலும் ஆண்டுதோறும் மழை காலங்களில் அழுகல் நோய் பாதிப்பிற்கு தீர்வில்லாமல், ஏல விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதற்கு மழையை தாங்கி வளரும், அழுகல் நோய் எதிர்ப்பு ரகங்களை அறிமுகம் செய்ய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையங்களும், ஸ்பைசஸ் வாரியமும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏல விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஏலக்காய் முன்னோடி விவசாயி அருண்பிரசாத் கூறியதாவது: ஏலக்காய் செடியின் காய்ப்புத் திறன் குறைந்து வருகிறது. மண்னின் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிப்படுத்த, 'ஸ்பைசஸ் வாரியம்' உதவ வேண்டும்., என்றார்.

