/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில அட்யா பட்யா போட்டி தேனி மாவட்ட அணி சாம்பியன்
/
மாநில அட்யா பட்யா போட்டி தேனி மாவட்ட அணி சாம்பியன்
மாநில அட்யா பட்யா போட்டி தேனி மாவட்ட அணி சாம்பியன்
மாநில அட்யா பட்யா போட்டி தேனி மாவட்ட அணி சாம்பியன்
ADDED : ஜூலை 02, 2025 07:19 AM

பெரியகுளம் : மாநில அளவிலான அட்யா- பட்யா விளையாட்டு போட்டியில் தேனி மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தேனி மாவட்ட அட்யா- பட்யா விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான சப் ஜூனியர் (14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகள்) விளையாட்டு போட்டிகள், மேரிமாதா கலை, அறிவியல் கல்லூரியில் மூன்று நாட்கள் நடந்தது. போட்டிகளை இளைஞர் விளையாட்டு கழகம் தலைவர் டாக்டர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம், துணைமுதல்வர் ஜோசிபரம்தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய் மங்களத்து, தமிழ்நாடு அட்யா-பட்யா சங்கம் பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் நடேசன், எண்டப்புளி ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கவுதம் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். ஏராளமான மாணவர்கள் மாணவிகள் விளையாடினர்.
பரிசளிப்பு விழாவிற்கு தங்கதமிழ்செல்வன் எம்.பி., தலைமை வகித்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள் இயக்குனர் அம்பலவாணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட அட்யா- பட்யா தலைவர் செல்வக்குமார பாண்டியன், செயலாளர் முத்துக்குமரன் வரவேற்றனர். எம்.எல்.ஏ., சரவணக்குமார், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை பெற்றது. செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தை ஈரோடு, திருவள்ளூர் மாவட்டம் பிடித்தது.--