/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு குண்டாஸ்
/
தேனி கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு குண்டாஸ்
ADDED : மே 27, 2025 01:29 AM
தேனி: தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார்.
தேனி மாவட்டம் தேவராம் அழகர்நாயக்கன்பட்டி தனலட்சுமி 38, மீது கஞ்சா விற்றது, கஞ்சா வைத்திருந்ததாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நிலக்கோட்டை மகளிர் சிறையில் உள்ளார்.
கண்டமனுார் வடக்கு தெரு கருப்பசாமி 20, ஆனந்தபாண்டி 23, ஆண்டிபட்டி மணியாரம்பட்டி மாதவன் 41, ஆகியோர் மீதும் கஞ்சா விற்றதாக தலா 2 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சிவபிரசாத் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். தேனி மாவட்ட சிறையிலுள்ள மாதவன், கருப்பசாமி, ஆனந்தபாண்டிக்கு இதுகுறித்த உத்தரவு நகல் வழங்கப்பட்டது.