/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளி வங்கிக் கணக்கில் ரூ.1.05 கோடி டெபாசிட் தேனி வருமான வரித்துறை விசாரணை

ADDED : ஜூலை 31, 2025 02:20 AM
தேனி:''தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயக்கவுண்டன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் 34, என்ற தொழிலாளியின்வங்கிக் கணக்கில் ரூ.1 கோடியை 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்தது குறித்து விளக்கம் அளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
காமயக்கவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெரு மணிகண்டன் 34. விவசாய கூலி. இவருக்கு ஒன்றரை ஏக்கர் ஏலத்தோட்டம்கேரளா, இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் உள்ளது. தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு அனுப்பிய நோட்டீஸில், 'உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் 2014- 2015ம் நிதியாண்டில் ரூ.1 கோடியே5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் ஆகியுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69அ பிரகாரம் விளக்கம் அளிக்க வேண்டியதுதங்களின் கடமையாகும். 2025 ஜூலை 30ல் நேரில் ஆஜராக வேண்டும்,' என அறிவுறுத்தியிருந்தனர்.
தேனிவருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்ற மணிகண்டன், 'இந்த பரிவர்த்தனைக்கும் எனக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என எழுதி கொடுத்து விளக்கம் அளித்தார்.