sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பற்றாக்குறை குடிநீர் வினியோகத்தால் விலைக்கு வாங்கும் அவலம்; தேனி நகராட்சி 17வது வார்டு மக்கள் அவதி

/

பற்றாக்குறை குடிநீர் வினியோகத்தால் விலைக்கு வாங்கும் அவலம்; தேனி நகராட்சி 17வது வார்டு மக்கள் அவதி

பற்றாக்குறை குடிநீர் வினியோகத்தால் விலைக்கு வாங்கும் அவலம்; தேனி நகராட்சி 17வது வார்டு மக்கள் அவதி

பற்றாக்குறை குடிநீர் வினியோகத்தால் விலைக்கு வாங்கும் அவலம்; தேனி நகராட்சி 17வது வார்டு மக்கள் அவதி


ADDED : ஏப் 19, 2025 06:12 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி; தேனி நகராட்சி 17வது வார்டில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகிப்பதால் கோடை கால பற்றாக்குறையை சமாளிக்க விலைக்கு கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்துவதாக புகார் கூறுகின்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சி 17வது வார்டில் தேனி வனச்சரக அலுவலகம்,சமதர்மபுரம், பி.டி.ஆர்., மெயின் ரோடு,பக்தவச்சலம், அண்ணா தெருக்கள், மிரண்டாலைன் ஆகிய பகுதிகள் உள்ளன.

வனச்சரக அலுவலகவளாகம் மற்றும் மிரண்டா லைன் நுழைவு பகுதிகளில் சமூக விரோதிகள் இரவில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தி அவ்வழியாக செல்லும் இளம்பெண்கள், இல்லத்தரசிகளைஅச்சுறுத்துகின்றனர்.

அதனால் தேனி போலீசார் அப்பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்களைபொருத்தி ரோந்து சென்று சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்.

அதேப்பகுதியில் வனச்சரக அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் டூவீலரில் செல்வோர் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. இப்பகுதி மக்கள் அடிப்படை பிரச்னைகள் குறித்து கூறியதாவது:

சேதமடைந்த தெருக்கள்


பரமசிவன், மிரண்டாலைன், தேனி: மிராண்டாலைன் பகுதியில் அடிக்கடி தெருவிளக்கு எரிவதில்லை. இதுகுறித்து நகராட்சியில் புகார் அளித்தால், ஆட்கள் பற்றாக்குறை எனக்கூறிவிட்டு, சீரமைக்காததால் தெருக்கள் இருளில் மூழ்கி உள்ளது.

சமதர்மபுரத்தில் ஐந்து முதல் 10 தெரு நாய்கள் இணைந்து அப்பகுதியில் விளையாடும் சிறார்களை கடித்து காயப்படுத்துகிறது.

சமதர்மபுரம் பகுதியில் தெருநாய்கள் கடித்து 5க்கும் மேற்பட்ட சிறார்கள், சிறுமிகள் காயமடைந்து குணமாகி உள்ளனர்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த முறையான கருத்தடை ஆப்பரேஷன் செய்திட வேண்டும். மேலும் இந்த வார்டில் உள்ள அனைத்துதெருக்களிலும் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் பெயர்ந்துள்ளது.

இதனால் தெருவில் டூவீலரகள் சென்றுவர சிரமமாக உள்ளது. சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கற்களை சீரமைக்கவேண்டும்.

குடி நீர் பற்றாக்குறை


சிவம், பி.டி.ஆர்., மெயின் ரோடு, சமதர்மபுரம், தேனி: சமதர்மபுரம் பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம்செய்கின்றனர்.

அந்த குடிநீரும் பற்றாக் குறையாக வருவதால், தெருக்களில் வசிக்கும்மக்கள் அருகில் இருக்கும் கடைகளில் விலைக்கு குடிநீரை வாங்கி பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை இன்றி வினியோகிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us