/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திட்டச் சாலையை மறு அளவீடு செய்ய தேனி நகராட்சி பரிந்துரை
/
திட்டச் சாலையை மறு அளவீடு செய்ய தேனி நகராட்சி பரிந்துரை
திட்டச் சாலையை மறு அளவீடு செய்ய தேனி நகராட்சி பரிந்துரை
திட்டச் சாலையை மறு அளவீடு செய்ய தேனி நகராட்சி பரிந்துரை
ADDED : மே 16, 2025 04:12 AM
தேனி: தேனியில் திட்டசாலையை மறு அளவீடு செய்யுமாறு நிலஅளவைத்துறைக்கு நகராட்சி சார்பில் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பபட்டுள்ளது.
தேனி நகராட்சி பகுதியில் பல திட்டசாலைகள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன. இதனால் நகரில் பல இடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் இருந்து கம்பம் ரோடு வரையிலான திட்டசாலை பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுத்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்ட சாலையில் முதற்கட்டமாக ரயில் நிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டர் முதல் கம்பம் ரோடு வரை உள்ள பகுதியில் நில அளவைத்துறை மூலம் மறு அளவீடு பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. இதற்காக நில அளவைத்துறைக்கு நகராட்சி மூலம் கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்த ரோடு பயன்பாட்டிற்கு வந்தால், கம்பம் ரோடு முதல் பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு உள்ளது.