/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
/
சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
ADDED : மே 17, 2025 03:33 AM

தேனி: தேனி நகராட்சி 19வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தராததால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி 19 வது வார்டில் ஜெயபிரகாஷ் தெரு, குமாரசாமி ராஜாதெரு, சாஸ்திரி தெரு, ஜவஹர்தெரு, பெரியார் தெரு, பி.டி.ராஜன் தெரு, நரேந்திரதேவ்தெரு, வ.உ.சி., தெரு, அண்ணாதெரு, பசும்பொன்தெரு, எம்.ஜி.ஆர்., மெயின்தெரு, அன்னை இந்திரா தெரு, கம்பம் நடராஜன் தெரு, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இந்த தெருக்களில் பெரும்பாலானவற்றில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் குழாய் பதிக்கவும், வேறு சில பணிகளுக்காக பலமுறை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த தெரு மேடுபள்ளங்களாக மாறியுள்ளது. பொதுமக்கள் சேதமடைந்த தெருக்களில் செல்லும் போது அடிக்கடி தவறி விழந்து காயமடைகின்றனர். வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் இரவில் மட்டுமின்றி பகலிலும் குழந்தைகள், முதியவர்கள் வெளியில் நடக்க முடியாத சூழல் உள்ளது.
அவ்வப்போது சிலரை தெருநாய்கள் துரத்துவதும் தொடர்கிறது. கவுன்சிலர் வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என்பது பலரின் குமுறலாக உள்ளது. தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரோடுகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கும் கழிவு நீரால் பாதிப்பு
ஜமுனாராணி, பெரியார் தெரு, தேனி : பல இடங்களில் மெயின் தெருவை விட குறுக்குத்தெருக்கள் பள்ளமாக உள்ளது. இணைப்பு பாலத்தின் உட்பகுதியில் மண் அதிகம் சேர்ந்ததால் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியின்றி உள்ளது. கழிவு நீர் தேங்கி உள்ளது. சில நேரங்களில் சாக்கடை மண்ணை எடுத்து அருகிலேயே விட்டு செல்கின்றனர். அவை மீண்டும் சாக்கடையில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த தெருவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்ய வந்த வாகனம் சாக்கடையை உடைத்து சென்றது. சாக்கடையை சீரமைத்து தர நகராட்சியில் கூறினாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சாக்கடை மாத கணக்கில் தேங்குவதால் அதில் உற்பத்தியாகும் புழுக்கள் வீடுகளுக்குள் உட்புகுகின்றன. இதனால் குடியிருப்போர் பல்வேறு நோய்களல் பாதிக்கப்படுகிறோம்.
எலித்தொல்லையால் அவதி
மகேஸ்வரன், பெரியார் தெரு, தேனி :தெருவில் பல இடங்களில் எலிகள் ரோட்டினை சேதப்படுத்தி உள்ளன. இதனால் தெருவில் பல இடங்களில் எலி வலைகளாக காணப்படுகிறது.
எலிகளை கட்டுப்படுத்த வேண்டும். பலரின் வீட்டு சுவர்களையும் எலிகள் சேதப்படுத்துகின்றன. இது தவிர தெருவில் பல இடங்களில் நகராட்சி சார்பில் வீட்டு உபயோகத்திற்காக பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளன. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்..
புதிய சாக்கடை அமைக்க நடவடிக்கை
நாராயணபாண்டியன், வார்டு கவுன்சிலர் : பெரியார் தெருவில் புதிய சாக்கடை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்காக நகராட்சி உதவி பொறியாளர் தலைமையில் அளவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவதில் இருதரப்பு இடையே பிரச்னை உள்ளது. அதனை சரி செய்தால் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருதரப்பு பிரச்னை சரிசெய்யப்பட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.