/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் தேனி நகராட்சி அலட்சியம்; கொடிக்கம்பங்களை அகற்றுவதில் மெத்தனம்

ADDED : மே 04, 2025 06:20 AM

தேனி : உயர்நீதிமன்றம் ரோட்டோரம், பொது இடங்களில் உள்ள கொடிகம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால், தேனி நகராட்சி நிர்வாகம் அந்த உத்தரவை அமல்படுத்தாததால் பல இடங்களில் கொடிகம்பங்கள் இடையூறாக உள்ளன.
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், பொது இடங்களில் இடையூறாக கட்சி, அமைப்புகளின் கொடிகம்பங்கள் இருக்க கூடாது என கடந்த ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை ஏப்.,21க்குள் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கட்சியினர், பல்வேறு அமைப்பினருடன் தேனி நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்.,30 வரை அவகாசம் வழங்கியது. தி.மு.க., தலைமையும் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. தி.மு.க.,வினர் கட்சி கொடிகம்பங்களை மட்டும் அகற்றி, பீடங்களை அகற்றவில்லை.
தேனியில் அல்லிநகரம், கருவேல்நாயக்கன்பட்டி, பெரியகுளம் ரோடு, பங்களாமேடு உள்ளிட்ட பல இடங்களில் கொடிகம்பங்கள் அகற்றப்படாமல் இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆவர்லர்கள் கூறுகின்றனர்.
நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், நாளை(மே.5) முதல் கொடிக்கம்பங்கள் முழுவீச்சில் அகற்றப்படும். இதற்காக நகராட்சியில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.