/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ.1.82 கோடியில் மேம்பாடு
/
தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ.1.82 கோடியில் மேம்பாடு
தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ.1.82 கோடியில் மேம்பாடு
தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ.1.82 கோடியில் மேம்பாடு
ADDED : ஜூலை 30, 2025 12:29 AM
தேனி : தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக்கு பஸ் ஸ்டாண்டில் ரூ. 1.82 கோடி மதிப்பில் நகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி ரூ. 1.82 கோடி மதிப்பில் நடக்க உள்ளது. இதில் புதிய இருக்கைகள் அமைத்தல், சேதமடைந்த மின் விளக்குகளை மாற்றுதல், அனைத்து பஸ்களும் மேற்கு நுழைவாயில் வழியாக செல்லும் வகையில் மூணாறு பஸ் நிறுத்தம் அருகே புதிய வழித்தடம் அமைத்தல், சேதமடைந்த மேற்கூரைகள் மாற்றி அமைத்தல் உள்ளிட்டபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அது தவிர கே.ஆர்.ஆர்., நகர் 6வது தெரிவில் உள்ள பழைய பயன்பாடில்லாத மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடித்து அகற்ற உள்ளோம். அந்த இடத்தில் எம்.எல்.ஏ., நிதியில் ரூ.15 லட்சத்தில் ரேஷன் கடை அமைக்க உள்ளோம் என்றனர்.