/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாய தொழில்நுட்ப தகவல்கள் கிராம தொடுதிரைகளில் கிடைக்கும்
/
விவசாய தொழில்நுட்ப தகவல்கள் கிராம தொடுதிரைகளில் கிடைக்கும்
விவசாய தொழில்நுட்ப தகவல்கள் கிராம தொடுதிரைகளில் கிடைக்கும்
விவசாய தொழில்நுட்ப தகவல்கள் கிராம தொடுதிரைகளில் கிடைக்கும்
ADDED : ஜூலை 29, 2011 11:12 PM
தேனி : கிராமப்புற விவசாயிகளுக்கு விவசாய தொழில்நுட்ப தகவல்களை தொடுதிரைகள் மூலம் வழங்க விவசாயத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கிராமப்புற விவசாயிகளுக்கு எல்லா விதமான விவசாய தொழில்நுட்ப தகவல்கள் முறையாக சென்று சேர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக விவசாய, தோட்டக்கலைத்துறையின் களப்பணியாளர்கள் சென்று விவசாயிகளை சந்தித்து தொழில்நுட்ப தகவல்களை வழங்கி வருகின்றனர்.இதன் ஒரு கட்டமாக, கிராமம்தோறும் தொடுதிரைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.எந்தெந்த சீசனில் என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யலாம். இதற்கான தொழில்நுட்பங்கள், அரசு வழங்கும் மானியங்கள் என்ன? பயன்படுத்த வேண்டிய உரங்கள், பூச்சி மருந்துகள் என்ன? இவற்றினை எந்த அளவு பயன்படுத்த வேண்டும். உரங்கள், பூச்சி மருந்துகளை எங்கெங்கு வாங்கலாம். அவற்றிற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை என்ன, அரசு வழங்கும் மானியம் எவ்வளவு, மீதம் எவ்வளவு பணம் விவசாயிகள் தர வேண்டும். மார்க்கெட்டிங் வசதி எப்படி உள்ளது. மார்க்கெட்டில் விலை நிலவரம் எப்படி உள்ளது என்பது உட்பட எல்லா விதமான தகவல்களும் தொடுதிரையில் கிடைக்கும். தொடுதிரையை எத்தனை விவசாயிகள் பயன்படுத்தி உள்ளனர் என்ற விவரங்களும் விவசாயத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் சேகரிக்கப்படும்.