/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவிகளுக்கு அழைப்பு
/
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவிகளுக்கு அழைப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவிகளுக்கு அழைப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 29, 2011 11:17 PM
தேனி : ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கைவினை பயிற்சி திட்டத்தில் சேர மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கோபா, டிடிபிஓ, துணி வெட்டுதல், தையல் தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடக்கிறது. ஜூலை 31ம் தேதி வரை இச்சேர்க்கை நடைபெறும். கோபா, டிடிபிஓ பிரிவுகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சியும், தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு 150 ரூபாய், பழங்குடியினருக்கு 175 ரூபாய், சீர்மரபினருக்கு 175 ரூபாய், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 100 ரூபாய் மாதந்தோறும் உதவிதொகை வழங்கப்படும். விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்பு அட்டை பெற்றவர்களின் குழந்தைகளுக்கு 1750 ரூபாய் ஒரே தவணையில் வழங்கப்படும். இலவச பஸ்பாஸ் வசதியும் உண்டு. விண்ணப்பக்கட்டணம் 50 ரூபாய்.