ADDED : ஆக 09, 2011 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருஷநாடு : கடமலை-மயிலை ஒன்றியம், வாய்க்கால்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆத்துக்காடு,கோவில்பாறை, புதூர், உப்புத்துறை, ஆட்டுப்பாறை ஆகிய கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ.. தொலைவில் பள்ளி அமைந்துள்ளது. பள்ளிக்கு செல்ல ரோடு வசதி இல்லை. மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்கு சத்துணவுக்கூடம் இல்லை. பொருட்களை பாதுகாக்க காவலர் இல்லை.இதனால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கேட்டு பள்ளி நிர்வாகம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வாய்க்கால்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள பொருட்களை பாதுகாக்க சுற்றுச் சுவர் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

