ADDED : ஆக 09, 2011 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருஷநாடு : கடமலை-மயிலை ஒன்றியம்,செங்குளம் -மூலக்கடை செல்லும் ரோடு பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் குண்டும்,குழியுமாக மாறியது.
இப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த ரோட்டை புதுப்பிக்க, நபாடு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.97.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக ஒன்றியக்குழுத் தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.

