sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா தொகுப்பு

/

தேனி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா தொகுப்பு

தேனி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா தொகுப்பு

தேனி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா தொகுப்பு


ADDED : ஆக 16, 2011 11:43 PM

Google News

ADDED : ஆக 16, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு:அல்லிநகரம் முத்தையா ஆரம்பப்பள்ளியில் பள்ளி கல்விக்குழு தலைவர் சுந்தரம் தலைமையில், தேனி உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கபாண்டியன், உட்பட பலர் பங்கேற்றனர்.

* பழனிசெட்டிபட்டி அன்னை தெரசா ஆங்கிலப்பள்ளியில், செயலாளர் வசந்தி தலைமையில், தாளாளர் தேவகுமார் கொடியேற்றினார்.

* தேனி பாரஸ்ட் ரோடு மூன்றாவது தெருவில், ஆண்கள் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு சார்பில் விழா நடந்தது. நேசம் தொண்டு நிறுவன தலைவர் முருகன் கொடியேற்றினார்.

போடி: போடி வனத்துறை அலுவலகத்தில் ரேஞ்சர் சந்திரசேகரன் கொடியேற்றினார்.

மனித உரிமை கழகத்தின் சார்பில் புரவலர் மகராஜன் கொடியேற்றினார். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் பன்னீர் செல்வம் கொடியேற்றினார்.

ஆண்டிபட்டி: எஸ்.கே.ஏ., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் வச்சிரவேல் கொடியேற்றினார். ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வாசகர் கொடியேற்றினார்.லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளர் ஹென்றி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணைதலைவர் பன்னீர்செல்வம், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரூராட்சி தலைவர் ராமசாமி ஆகியோர் கொடியேற்றினர்.

வண்டல் கரட்டுப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, ஏத்தக்கோயில் அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கொடியேற்றினர்.

கூடலூர்: கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ஜெயசுதா கொடியேற்றினார்.

* வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் கொடியேற்றினர்.

* என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கதிரேசன் கொடியேற்றனார்.

*திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளித்தாளாளர் பெரியகருப்பன் கொடியேற்றினார்.

*ராஜாங்கம் நினைவு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஜெயந்தி கொடியேற்றினா.

* மக்கள் மன்றம் சார்பில் முத்த உறுப்பினர் ரங்கநாதன் கொடியேற்றினார்.

*அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை டாக்டர் கலாவதி கொடியேற்றினார்.

* மனித உரிமைகள் கழக அலுவலகத்தில் என்.எஸ்.கே.பி., பள்ளி தாளாளர் அச்சுதன் கொடியேற்றினார். நகராட்சி தலைவர் ஜெயசுதாலந்து கொண்டனர்.

*முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க கட்டடத்தில் தலைவர் சோலைராஜ் கொடியேற்றினார். பஞ்சாயத்து யூனியன் பூங்கா நடுநிலைப்பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் ராஜா கொடியேற்றினார். *இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கன்னிகாளிபுரத்தில் ஏரியா செயலாளர் முருகன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கொடியேற்றினார். *குள்ளப்பகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன் சந்திரா மகளிர் கல்லூரியில் தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், பொருளாளர் சந்திரா கொடியேற்றினார்.

*குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வீரராகவன் கொடியேற்றினார்.

*கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில்பேராசிரியை வாணி கொடியேற்றினார்.

பெரியகுளம்: * பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ராஜகோபால் கொடியேற்றினார்.

* கைலாசபட்டி நேசம் தொண்டு நிறுவனத்தில் இயக்குனர் முருகன் கொடியேற்றினார். ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார்.

* நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்க தலைவர் பழனிராஜகோபால் கொடியேற்றினார்.

* எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்குழு தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். பள்ளி செயலர் எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, பிரம்மஞானமந்திரம் தலைவர் சசிதரன் முன்னிலை வகித்தனர்.

* பிரசிடென்சி நர்சரி மற்றும் மழயைர் பள்ளியில் பள்ளி தலைவர் கோபாலகிருஷ்ணன் கொடியேற்றினார்.

* ஸ்ரீ சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் பள்ளி செயலர் ராஜா கொடியேற்றினார்.

தேவதானப்பட்டி:* தேவதா னப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,நாஞ்சில்குமார் கொடியேற்றினார். ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., திலகா கொடியேற்றினார். ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சண்முகம் கொடியேற்றினார்.

* மேல்மங்கலம் ஊராட்சியில் தலைவர் மலைச்சாமி, முதலக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் முத்துப்பாண்டி, எ.வாடிப்பட்டி ஊராட்சியில் தலைவர் பூங்கொடி, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் கோபால், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் தலைவர் ஆண்டிச்சாமி, டி.வாடிப்பட்டி ஊராட்சியில் தலைவர் மகராசன் கொடியேற்றினர்.

* குள்ளப்புரம் விவசாய தொழில்நுட்ப கல்லூரியில் ஊராட்சி தலைவர் ஜெயபால் தலைமையில் நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார்.

* நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கல்லூரியில் நிர்வாக அலுவலர் ஜோபி அலெக்ஸ் தலைமையில் டாக்டர் கண்ணன் போகராஜ் கொடியேற்றினார்.

* தர்மலிங்கபுரம் தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்மன் சுந்தரம் தலைமையில், துணைத்தலைவர் காமராஜ் கொடியேற்றினார். முதல்வர் சங்கர் வரவேற்றார்.

* சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திராகாந்தி தலைமையில் ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி கொடியேற்றினார்.

* நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி முன்னாள் ராணுவத்தினர்கள் நலச்சங்கம் சார்பில் கேப்டன் வீராச்சாமி தலைமையில் சுபேதார் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார்.

கம்பம்: கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தலைவர் சூரியாதங்கராஜா தேசிய கொடி ஏற்றினார். துணை தலைவர் நெடுஞ்செழியன், கமிஷனர்கள் ரங்கராஜ், அம்சத் பங்கேற்றனர்.

* நகராட்சி அலுவலகத்தில் தலைவர் அம்பிகா கொடியேற்றினார். கமிஷனர் (பொ) மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ அலுவலர் சையதுசுல்தான்இப்ராகீம் கொடியேற்றினார்.

* நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் காந்தவாசன் கொடிஏற்றினார். இணை செயலாளர் சுகன்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

* சக்திவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் அலமேலு கொடி ஏற்றினார். தாளாளர் கிருஷ்ணவேணி, செயலர் அச்சுதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* அல்அஹ்ஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழு தலைவர் அஷ்ரப்அலி தேசிய கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் சிக்கந்தர் முன்னிலை வகித்தார்.

* சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் முருகேசன் கொடி ஏற்றினார். * ஸ்ரீமுத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் தாளாளர் மகுடகாந்தன் கொடியேற்றினார்.

* அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சாந்தகுமாரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமர் தேசிய கொடி ஏற்றினார்.

* அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை பிரேமா தலைமையில் பரவு காவல் சங்க தலைவர் குமரேசன் கொடி ஏற்றினார்.

*கள்ளர் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி தலைவர் அம்பிகா கொடியேற்றினார்.

* ஆதிசுஞ்சனிகிரி ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் லயன்ஸ் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், கொடியேற்றினார். செயலாளர் பூமிநாதன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

* நகர காங்., கமிட்டி சார்பில் நகரின் பல இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நகர தலைவர் ராமர், இளைஞர் காங்., தொகுதி தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநில கமிட்டி உறுப்பினர் அஜ்மல்கான் உட்படபலர் பங்கேற்றனர்.

* இளைஞர் காங்., சார்பில் தொகுதி தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

* வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் விநோஜி கொடியேற்றினார்.

காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் கல்விக்குழு தலைவர் சம்பத்குமார், தேசிய கொடியேற்றினார்.

வருஷநாடு: முருக்கோடை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் ராமர், சிங்கராஜபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், வைகை நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைரலட்சமி,மயிலாடும்பாறை அரசு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் பரமேஸ்வரன் கொடியேற்றினர்.

* ஒட்டனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜா, கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மலையரசன், பவள நகரில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வியக்கமல், வண்ணாத்திப்பாறை தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண்குமார், தொப்பையாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணன்,வருஷநாடு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் கொடியேற்றினர்.

* ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் தலைவர் கொத்தாளமுத்து , பாலுத்து ஊராட்சியில் தலைவர் சேர்மலை, கடமலைக்குண்டு ஊராட்சியில் தலைவர் நாகராஜ்,முத்தாலம்பாறை ஊராட்சியில் தலைவர் முத்துத்தேவர், நரியூத்து ஊராட்சியில் தலைவர் பழனியம்மாள், பொன்னன்படுகை ஊராட்சியில் தலைவர் காத்தமுத்து,மேகமலை ஊராட்சியில் தலைவர் செல்லத்துரை கொடியேற்றினர்.கண்டமனூர் 'நாளை நமதே அசோசியேசன்' சார்பில், கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சுதந்திர தின விழா நடந்தது.வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், இந்தியன் வங்கி காசாளர் கருப்பசாமி, டாக்டர் மீனாட்சியம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்புலட்சுமி, துணை தலைவர் சொக்கலிங்கம், கொடுவிலார்பட்டி தலைமை ஆசிரியர் செல்லபாப்பா, நாளை நமதே அசோசியன் தலைவர் அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.தேவாரம்: டி.எச்.என்.யு., மெட்ரிக் பள்ளியில், தாளாளர் கல்யாணகுமார் தலைமையில், இந்து நாடார் உறவின்முறை தலைவர் சண்முகவேலு கொடியேற்றினார். செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். எவரெஸ்ட் கல்வி பயிற்சி மையத்தில், முதல்வர் கதிரேசன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் அருண்குமார், அழகுராஜா பங்கேற்றனர்

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைநீர் வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் உயர வாய்ப்பு

தேனி : வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றத்தையே கொடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. இம்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஓரளவு மழை பெய்து வருகிறது. அங்கு 10 மி.மீ., மழையும், தேனியில் அதிகபட்சமாக 36 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

நீர்வரத்து:நேற்று காலை 8 மணி நிலவரப்படி, வைகை அணைக்கு வினாடிக்கு 1,198 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 960 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் 46.78 அடியாக உள்ளது.

பெரியாறு அணையில், 122.30 அடி நீர் உள்ளது. 746 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1,342 கன அடி வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையில் 38.40 அடியும், சோத்துப்பாறையில் 26.56 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணைக்கு 28 கன அடியும், சோத்துப்பாறைக்கு 5 கன அடியும் நீர் வரத்து உள்ளது.மழையளவு (மி.மீ.,):பெரியகுளம்-12.5, மஞ்சளாறு-15, ஆண்டிபட்டி 5.40, வீரபாண்டி-3, தேக் கடி-9.40, பெரியாறு 8.20, கூடலூர்-4, போடி-6.40 உத்தமபாளையம்-17, சோத்துப்பாறை-18.






      Dinamalar
      Follow us