நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர் : கூடலூர் அ.தி.மு.க., நகர செயலாளர் சோலைராஜ்.
பஸ் ஸ்டாண்ட் அருகே
உள்ள டாஸ்டாக் கடையில் பார் நடத்துவதற்காக டெண்டர் எடுத்துள்ளார். இவருக்கு
முன்னதாக இதே இடத்தில் பார் டெண்டர் எடுத்தவர்கள், இவரது வீட்டிற்கு வந்து
தகராறில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு போலீசில் சோலைராஜ் கொடுத்த புகாரின்
பேரில், கூடலூரைச் சேர்ந்த ஜெகநாதன் (28), ஜெயக்கொடி (54) ஆகிய இருவரை கைது
செய்தனர்.