ADDED : ஆக 22, 2011 12:17 AM
தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகாவில் அரசு வழங்கும் மலிவு விலை சிமெண்ட்
கேட்டு பதிவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் கிடைக்கவில்லை.சிமெண்ட் விலை
வெளிமார்க்கெட்டில் மூடை 310 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதனால்
வீடுகட்டும் பொதுமக்கள் அரசு வழங்கும் மலிவுவிலை சிமென்ட் வாங்குவதில்
ஆர்வம் காட்டுகின்றனர். பெரிகுளம் தாலுகாவில் சிமென்ட் பெறுவதற்கு,
நல்லகருப்பன்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொரும் வாணிப கழத்தில்
முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு சிமென்ட் வந்த
பின் தகவல் தெரிவிக்கப்படும். ஜூன் மாதத்தில் பதிவு செய்தவர்களுக்கு
இன்னும் கிடைக்கவில்லை. சில்வார்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:
பதிவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை. உரிய
நேரத்தில் கிடைக்காததால் பாதிப்பு ஏற்படுகிறது. என்னைப் போல பலர்
பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்