/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் மண்தூசுகள் போக்குவரத்திற்கு சிரமம்
/
ரோட்டில் மண்தூசுகள் போக்குவரத்திற்கு சிரமம்
ADDED : ஆக 22, 2011 12:20 AM
போடி : போடி மெயின் ரோட்டில் படிந்துள்ள மண்தூசுகளால் போக்குவரத்திற்கு
சிரமம் ஏற்படுகிறது.போடி மெயின் ரோட்டில் குடிநீர்குழாய் அமைப்பதற்காக
தோண்டப்பட்ட குழிகளை மூடப்பட்டதால் ரோடு முழுவதும் குண்டும்,
குழியுமாகவும், மண்தூசுகளாகவும் காணப்படுகின்றன.
ரோட்டின் இருபுறமும்
ஆக்கிரமிப்பில் மண் மேடுகள் போட்டு பிளாட்பார கடைகள் அமைத்துள்ளனர். மண்
தூசுகளை அகற்றுவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி மூலம் பல ஆயிரம் ரூபாய்
மதிப்பில் தளவாடப்பொருட்கள் வாங்கப்பட்டன. சில நாள் மட்டுமே
பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அலுவலகத்திலே காட்சி பொருளாக
வைக்கப்பட்டுள்ளன. மெயின்ரோடுகளில் மண்தூசுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுக்கவில்லை. தார்ரோடு என்பதற்கான அடையாளமே இல்லாமல் மண்ரோடாக
உள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்லும் போதும் பறந்து வரும் மண் தூசுகள்
நடந்து, வாகனங்களில் வருபவர்களின் கண்களில் விழுகிறது.இதனால்
விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள்,
வர்த்தகர்கள் சங்கம் சார்பில் பல முறை கோரிக்கைவிடுத்தும் துப்புரவு பணி
மேற்கொள்வதில் நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகின்றன.விபத்துக்கள்
ஏற்படுவதை தவிர்க்கவும், ரோட்டில் படிந்துள்ள மண்தூசுகளை அகற்ற
வேண்டும்.போடி நகராட்சி துணை தலைவர் சங்கர் கூறுகையில்,'ரோட்டில் உள்ள
மாசுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்